Freelancer / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை
தாயைத் தாக்கிய தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அபிர்நாத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். 52 வயதான இவருக்கு மனைவி மற்றும் 19 வயதான மகன் உள்ளனர்.
இந்நிலையில் நீண்ட காலமாக , ராஜேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளதாகவும், இதன் காரணமாக ராஜேஷ் அவரது மனைவியை அவ்வப்போது தாக்கி வந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது ராஜேஷ் தனது மனைவியை தாக்கவே ஆத்திரமடைந்த மகன் கூர்மையான ஆயுதத்தால் தந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மகனைக் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 minute ago
24 minute ago
24 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
24 minute ago
38 minute ago