A.K.M. Ramzy / 2021 மார்ச் 30 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாராபுரம்:
தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. இன்னும் வாக்குப்பதிவுக்கு 6 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதாரித்து கூட்டணி கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நடிகர்கள், நடிகைகள் பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்தநிலையில் பா.ஜனதா வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) தாராபுரத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago