2026 மார்ச் 07, சனிக்கிழமை

தாராபுரத்தில் முருகனும், ஆயிரம் விளக்கில் குஷ்புவும்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 15 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தாராபுரத்தில் எல்.முருகனும், ஆயிரம் விளக்கில் நடிகை குஷ்புவும், கோவை தெற்கில் வானதி சீனிவாசனும், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தியும் போட்டியிடு கின்றனர்.

 அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு 6 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பசும்பொன் தேசிய கழகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.178 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலை  தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள், டெல்லியில் உள்ள தேசிய தலைமையிடம் கொடுத்தனர்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .