Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Janu / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாலி கட்டும் நேரத்தில் பொலிஸார் வந்ததாக நடிகர் போண்டா மணியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிங்கமுத்து தெரிவித்திருந்தார்.
இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி. 10ஆவது வரை படித்திருக்கிறார். இலங்கை போரில் தனது குடும்பத்தினர் 8 பேரை இழந்த நிலையில் காலில் குண்டு அடிப்பட்டு போண்டாமணி சென்னை வந்தார். அங்கு நாடக கம்பெனியில் வேலை செய்த நிலையில் அவருக்கு 1983 ஆம் ஆண்டு பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜ் வாய்ப்பு கொடுத்தார்.
இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் உனக்கு என்ன தெரியும் என கேட்டு கிண்டல் செய்தனராம். ஆனால் தனக்கு போண்டா மணியின் காமெடிதான் மிகவும் பிடிக்கும் என ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தெரிவிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு பருவக் காதல் என்ற படத்தில் நடித்த போது நிஜ சாக்கடையில் விழுந்ததால் அவருக்கு நுரையீரலில் தண்ணீர் கோர்த்துகொண்டு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்துதான் அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
ஆனால் சனிக்கிழமை (23) இரவு அவருக்கு திடீரென குளிர் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறக்கும் போது அவருக்கு வயது 60, இலங்கைத் தமிழரான அவருக்கு யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் கன்னடத்து பெண் மாதவியை போண்டாமணி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவருடைய இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த சிங்கமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது சிங்கமுத்துவுக்கு தினமும் ரூ. 25 கொடுத்து சாப்பிட வைத்துக் கொள்ளச் சொல்வேன். மேலும் நான் போண்டா மணியை திருமணம் செய்ய சொன்ன போது இலங்கையை சேர்நத தனக்கு யாரும் பெண் தர முன் வரவில்லை என தெரிவித்தார். இதனால் நானே பெண் பார்த்து என் சொந்த செலவில் அவருக்கு திருமணம் செய்து வைத்தேன். திருமணம் அன்று தாலி கட்டும் நேரத்தில் பொலிஸார் வந்துவிட்டனர்.
அவர் இலங்கையில் இருந்து வந்த அகதி என்பவதால் அவர் மீது ஒரு சந்தேகத்தின் பேரில் கைது செய்ய வந்தனர். இதனால் கைதாவதற்கு முன்பு அவர் அவசர அவசரமாக தாலி கட்டினார். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று போண்டா மணி இங்கே நடிக்க தான் வந்திருக்கிறார் என சொன்னதும் அவரை வெளியே விட்டார்கள் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago