A.K.M. Ramzy / 2021 மார்ச் 15 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தி.மு.க., தேர்தல் அறிக்கையை, சமீபத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அந்த அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் அளித்து, பாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருப்பது, ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
தேர்தல் அறிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தம் கருத்துத் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்; புதிய ஸ்மார்ட் கார்டு ஏன்? ஏற்கனவே, ஒரு ஸ்மார்ட் கார்டு உள்ளது. அதை நாங்கள் என்ன செய்வது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளாட்சி இட ஒதுக்கீடு என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. எத்தனையோ கூட்டங்கள் போட்டு பேசி, எங்கள் கோரிக்கைகளை வடிவமைத்துத் தந்தோம். ஆனால், அது முழுமையாக புறந்தள்ளப்பட்டுள்ளது எங்களுக்கு மனவலிமையைத் தந்திருக்கிறது.
கருணாநிதி, 'நானும் உங்களை போன்று ஊனமுற்றவன் தான்' என, கண்களில் நீர்வடிய எங்களை ஆதரத்தழுவினார். அதை நாங்கள் இப்போது நினைத்து பார்க்கிறறோம். இன்னும், நாங்கள் எத்தனைக் காலம் உடையார் முன் இல்லாதோர் போல் நிற்க வேண்டும் என, எண்ணி எண்ணி உடைகிறோம்; உடைந்து கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago