2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தி.மு.கவில் அணிகளிடையே அதிகாரப் போட்டி

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை  

 திராவிட முன்னேற்ற கழகத்தில்  மூன்று ராஜ்யசபா எம்.பி. பதவிகளை கைப்பற்றுவதற்கு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும், இளைஞர் அணி நிர்வாகிகளிடமும், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் (அ.தி.மு.க.) , ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முஹம்மது ஜான், சட்டசபை தேர்தலுக்கு முன் மரணம் அடைந்தார். கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றதால், தங்களின் ராஜ்யசபா எம்.பி., பதவியை இராஜினாமா செய்தனர்.

இதனால், தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா எம்.பி., இடங்கள் காலியாக உள்ளன. இந்த மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில், தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க., - எம்.பிக்கள் கோரிக்கை மனு வழங்கி உள்ளனர். இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், எம்.பி., பதவியை பிடிக்க, கட்சியின் மூத்த நிர்வாகிகள், இளைஞர் அணியினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X