A.K.M. Ramzy / 2021 மார்ச் 31 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாராபுரம் ;
தற்போது காங்கிரஸ் - திமுக ஒரு முக்கியமான ஏவுகணையை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் பெண்களை இழிவுப்படுத்துவதே திமுக - காங்கிரஸின் அந்த முக்கிய ஏவுகணையாக உள்ளது. நான் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். இது எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள், இதுபோன்ற செயலை அவர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வேலை பரிசாக அளித்தார். பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெற்றி வெற்றி வெற்றிவேல் என்ற முழக்கத்துடன் தனது உரையைத் தொடங்கினார்.
பின்னர் இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "நாட்டை இருளில் தள்ளியது காங்கிரஸ். பாஜக அரசுதான் தமிழகத்துக்கு நிறைய திட்டங்களை தந்துள்ளது. உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது மோடிதான். எண்ணற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை தந்துள்ளோம்" என்றார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago