2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

திருடர்களும், ரவுடிகளும் தான் பாரதிய ஜனதாவில் இணைகின்றனர்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தா:

“அனைத்து திருடர்களும், ரவுடிகளும் பா.ஜ. வில் இணைகின்றனர். அக்கட்சி திரிணாமுல் காங்கிரஸை வெல்லப்போவதாக கூறுகிறது. அது நிச்சயம் நடக்காது.” என மம்தா பானர்ஜி கோபத்துடன் கூறினார்.

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் விலகி பாரதிய ஜனதாவில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நெருக்கத்தில் அக்கட்சியில் மம்தா மட்டுமே எஞ்சியிருப்பார் என கடந்த வாரம் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

இது முதல்வர் மம்தாவை ஆத்திரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்து தற்போது பாரதிய ஜனதாவில்   சேர்ந்துள்ள ரஜீப் பானர்ஜி மீதான ஊழல் புகாரை தூசி தட்டியுள்ளார். பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

வடக்கு வங்காளத்தின் அலிபுர்துவாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்தும் பேசியதாவது: எனக்கு பலரிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். அடுத்த மூன்று, நான்கு நாட்களில் தேர்தல்கள் அறிவிக்கப்படலாம்.

அப்போதும் விசாரணை தொடரும். அனைத்து திருடர்களும், ரவுடிகளும் பா.ஜ.,வில் இணைகிறார்கள். அவர்கள் திரிணாமுல் காங்கிரஸைத்  தோற்கடிப்பார்கள் என்று கூறுகின்றனர். நீங்கள் ஒருபோதும் திரிணாமுல் காங்கிரஸைத் தோற்கடிக்க முடியாது. பா.ஜ., ஒரு வாஷிங் மெஷின். ஊழல் நிறைந்தவர்கள் அங்கு சேர்ந்து சுத்தமானவர்களாக வெளியே வருகிறார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .