2025 ஜூலை 30, புதன்கிழமை

திருடிய சிலைகளை திருப்பி கொடுத்த கனவு

Freelancer   / 2022 மே 18 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசத்தில் கோவில் ஒன்றில் பல கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளை திருடியவர்கள் அடுத்த சில நாட்களில் பயங்கரமான கனவுகள் வருவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, திருடிய சிலைகளை கோவில் அர்ச்சகரின் வீட்டின்முன் வைத்து தப்பியுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் சித்ரகூட மாவட்டத்தின் தருஹா என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவில் உள்ளது. இங்கு கடந்த மே 9ம் திகதி இரவு, பல கோடி மதிப்பிலான 16 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடா்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து திருடா்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், திருடுபோன ஆறே நாட்களில் 16 சிலைகளில் 14 சிலைகளை அந்தக் கோவில் அர்ச்சகரின் வீட்டுக்கு அருகே இரவு நேரத்தில் திருடர்கள் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். கூடவே ஒரு கடிதத்தையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .