2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு; இளைஞர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட இந்தியாவில் விழாக்களின் போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்  கொண்டாட்டத்தில் ஈடுபடும் கலாசாரம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டம், பிபிநகரில் நேற்றுமுன்தினம் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது ‘விஷால்‘ என்ற நபர் தான் வைத்திருந்த உரிமம்பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபோது தவறுதலாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சரத், ராஜ்குமார் ஆகிய  இருவர் மீது குண்டு பாய்ந்துள்ளது.

இதில், படுகாயமடைந்த 2 பேரும் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும், ராஜ் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்  சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விஷாலைக்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .