Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மே 18 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணத்தன்று மணமக்கள் இருவரும் விஷம் அருந்திய சம்பவம் மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக மணமகள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார் எனவும், ஆனால் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு மணமகன் கேட்டுள்ளார் எனவும், இதனால் ஆத்திரமடைந்த மணமகள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே இருவருக்கும் கடந்த செவ்வாய் கிழமை திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மனவிரக்தியில் இருந்த மணமகன் திருமணத்தன்று விஷம் குடித்துள்ளதோடு இது குறித்து மணமகளிடமும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகளும் விஷம் குடித்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் உறவினர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மணமகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அதே நேரத்தில் மணமகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
19 Jul 2025