Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 09 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணத்திற்கு மறுத்த மகளை, தந்தை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ராம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், கிரண் குமாரி என்ற 19 வயதான மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தேவ் ராம் தனது மகளுக்கு நாடி சர்மா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவுசெய்துள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்த கிரண் குமாரி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபரை காதலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தேவ் ராம் தனது இரண்டு சகோதரர்கள் உடன் சேர்ந்து தனது மகளை கட்டிவைத்து கழுத்தை அறுத்துள்ளார் எனவும் இதை தடுக்க முயன்ற அவரது மனைவியையும் தாக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரண் குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் தாக்குதல் நடத்திய மூவரும் அவ்விடத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, தப்பியோடிய மூவரையும் பொலிஸார் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago