2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

திருமணமாகாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Freelancer   / 2022 ஜூலை 15 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் ஒரு காலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரித்திருந்த நிலையில் தற்போது திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவையும் காரணமாகவே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 திருமணமாகாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும்,  ஒரு சில பிரபலங்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ள போவதிவில்லை என்று கூறுவதை இளைஞர்கள் பின்பற்றி வருகிறார்கள் தங்களுடைய விருப்பமான நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் போலவே தாங்களும் இருக்க வேண்டுமென்று அவர்கள் மனதில் ஓர் ஆழமான கருத்து தோன்றுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பொருளாதார சிக்கலும் திருமணத்தை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பினரும் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கொள்கை முடிவை எடுத்திருப்பதால் திருமணம் தாமதமாகி வருவதாக பலர் கூறுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X