2025 ஜூலை 24, வியாழக்கிழமை

திருமணமான காதலியை துண்டு துண்டுகளாக வெட்டிய காதலன்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தானில் திருமணமான காதலியை அவரது காதலர்,  கொலை செய்து துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பலாசார் கிராமத்தைச் சேர்ந்த குட்டி(Guddi).  இவர் அப்பகுதியைச் சேர்ந்த அனோப்ராம் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு ஆணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறு இருப்பினும் திருமணத்தின் பின்னரும் குட்டி தனது கணவருக்குத்

தெரியாமல் காதலருடன் பழகி வந்துள்ளார் எனவும், அடிக்கடி அவரைத்  தனிமையில் சந்தித்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாயின் வீட்டுக்குச் சென்று விட்டு வருவதாகக் கூறிய மனைவி காணமற் போனதால் அச்சமடைந்த அவரது கணவர் இது குறித்து பொலிஸ் நிலையில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குட்டியும் அனோப்ராமும் காதலித்து வந்துள்ளனர் என்பது  தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அனோப்ராமைக் கைது செய்த பொலிஸார் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் ”கடந்த 28ஆம் திகதி அன்று  குட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், இதனால் ஆத்திரத்தில் குட்டியைக் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வீசியதாகவும் அனோப்ராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .