2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருமணம் தொடர்பாக தவறான தகவல்

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 23 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

 மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ்  எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி, தன் திருமணம் தொடர்பாக தவறான தகவலை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய ஜனதா  எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோக்சபா எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி. இவர் மேற்கு வங்கத்தில் பிரபலமான நடிகை. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'எனக்கும், நிக்கில் ஜெயின் என்பவருக்கும் வெளிநாட்டில் வைத்து திருமணம் நடந்தது. அதை இந்தியாவில் பதிவு செய்யவில்லை. தற்போது நாங்கள் பிரிந்து விட்டோம்.  எனவே அதற்கு விவாகரத்து தேவையில்லை' எனக் கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., சங்கமித்ர மௌரியா, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிஉள்ளார்.

அக்கடிதத்தில், நஸ்ரத் ஜஹான் லோக்சபா தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில்,

'தன் கணவர் பெயர், நிக்கில் ஜெயின்' எனக் குறிப்பிட்டுள்ளார். அவர், பதவிப் பிரமாணம் ஏற்கையில் தன் பெயரை, 'நஸ்ரத் ஜஹான் ருஹி ஜெயின்' என தெரிவித்தார்.

இப்படி இருக்கையில், தன் திருமணம் குறித்து நஸ்ரத் தெரிவிக்கும் கருத்து, முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தவறான தகவலை தெரிவித்துள்ள அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X