A.K.M. Ramzy / 2021 ஜனவரி 09 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபரிமலை:
எருமேலி பேட்டை துள்ளல், திருவாபரண பவனிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை முறையே ஜனவரி 11ஆம் 12ஆம் திகதிகளில் நடைபெறும்.
சபரிமலையில் மகரவிளக்கு விழா ஜனவரி 14ஆம் திகதி நடக்கிறது. இதற்கு முன்னோடியாக நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் எருமேலி பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண பவனி. ஜனவரி 11 ஆம் திகதி நடைபெறும்
அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் குழுவின் பேட்டை துள்ளலில் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் 50 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இவர்கள் பேட்டை த்துள்ளலுக்கு பின்னர் பெருவழிப்பாதை வழியாக சபரிமலை வருவது வழக்கம்.
ஆனால் இந்த முறை இவர்கள் எருமேலியில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் வாகனங்களில் மும்பை வந்து சன்னிதானம் வரவேண்டும்.ஜனவரி 12 ஆம் திகதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது.
இதற்கும்பொலிஸ் உட்பட 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இது காட்டுப்பாதை வழியாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago