2025 ஜூலை 24, வியாழக்கிழமை

திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சிங்கம் 3 , பைரவா படங்கள் பண்டிகை காலங்களில் வெளியானபோது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த போது . தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் , கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட திரையரங்குகளில் அபராதம் வசூலிக்கப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக்  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம்  கூடுதலாகக்  கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தமிழாக அரசு கண்காணிக்க வேண்டும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .