2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தீ விபத்தில் 7,000 கோழிகள் தீக்கிரை

Freelancer   / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேதுபாவாசத்திரம் அருேக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட  தீ விபத்தில், 7,000 கோழிகள் கருகி உயிரிழந்தன. இதில் 58க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசம் அடைந்தன.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சொக்கநாதபுரம் ஊராட்சி, ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசிங்கம். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 48).

விவசாயியான இவர் அங்குள்ள பர்மா காலனி என்ற இடத்தில் 2 இடங்களில் கொட்டகை அமைத்து அதில் 7,000 கோழிகளை இறைச்சிக்காக வளர்த்து வந்தார்.

 இந்த கோழிப்பண்ணையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில் கோழிகள் இருந்த 2 கொட்டகைகளும் முற்றிலும் எரிந்து அதில் இருந்த 7,000 கோழிகளும் கருகி உயிரிழந்தன.

இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 58க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .