Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 12 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே வைத்து நடுக்கடலில் தீப்பற்றியெறிந்த கப்பலில் உள்ள 143 கொல்களன்களில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரசாயன பொருட்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இதையடுத்து கோழிக்கோடு வடகரா முதல் அரியூர் வரை கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்கள், மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது பொருட்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கினாலோ அல்லது கடலில் மிதந்து கிடந்தாலோ, அவற்றை தொடக்கூடாது. அதுகுறித்து உடனடியாக கடல் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொழும்பில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9ஆம் திகதி சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.பி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கொல்களன்கள் தீப்பிடித்து எரிந்தது.
கப்பலில் இருந்த கொல்களன்களில் 20 டொன் வெடிபொருட்கள், அபாயகரமான இரசாயனங்கள் இருந்ததால் வெடித்து சிதறின. இதனால் கப்பலில் இருந்து கரும்புகை கிளம்பியது.
தொடர்ந்து கப்பலின் நடு பகுதியில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு உள்ளது. ஆனால், கப்பலின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் தீ எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த 5 கப்பல்கள் உதவியுடன் கடல் எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் தீயணைப்பு பணியை துரிதப்படுத்த பெங்களூருவில் இருந்து 2 கப்பல்கள், மும்பையில் இருந்து ஒரு கப்பல் உள்பட 4 கப்பல்கள் கொண்டு வரப்படவுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து அலை காரணமாக சரக்கு கப்பல் கட்டுப்பாடு இன்றி நகர்ந்து செல்கிறது. இதை தடுக்க கடல் எல்லை பாதுகாப்பு படையினர் முயற்சித்து வருகின்றனர்.
தீயை முழுமையாக அணைக்க முடியாவிட்டால் அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு தீயணைப்பு நிபுணர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் 1,754 கொல்களன்கள் உள்ளன. இதில் 1,083 கொல்களன்கள் கப்பலின் அடித்தட்டிலும், 671 கொல்களன்கள் மேல் பகுதியிலும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தமை குற்றிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago