2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் செப்.12 பதவி ஏற்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா வெள்ளிக்கிழமை(12) நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
 
துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.
 
இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X