Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்குவது அரச காலத்தில் இருந்தே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். குற்றத்தின் அளவை பொறுத்து அந்த சன்மானத்தின் மதிப்பு ஆயிரம், லட்சம், கோடி என நிர்ணயம் செய்யப்படும்.
தற்போதும், பெரிய குற்றவழக்குகளில் தேடப்படுவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு பொலிஸார் சன்மானம் வழங்கி வருகின்றனர். ஆனால், இது தொடர்பாக ராஜஸ்தான் பொலிஸார், கொஞ்சம் விநோதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிங்கானா என்ற இடத்தில் யோகேஷ் மேக்வால் என்பவர் மீது பொலிஸார் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். யோகேஷ் திடீரென மாயமான நிலையில், பொலிஸார் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் தலைமறைவான யோகேஷ் குறித்து தகவல் தருபவருக்கு 50 காசுகள் சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சுற்றுவட்டாரம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த வினோத அறிவிப்பு பொதுமக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், ஜுன்ஜுன் மாவட்ட எஸ்.பி தேவேந்திர விஷ்னோய் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “குற்றவாளிகளின் மதிப்பு 50 பைசாதான். அதுகூட தற்போது புழக்கத்தில் இல்லை. குற்றவாளிகளுக்கு எப்போதும் சமூகத்தில் மதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
09 May 2025