2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தெரு நாயுடன் கூட்டத்துக்கு வந்த பிரமுகர்

Freelancer   / 2024 மார்ச் 09 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


நகர்மன்ற கூட்டம் நடைபெற்றபோது தெரு நாய்கள் தொல்லையை சுட்டிக்காட்ட பிரமுகர் ஒருவர் தெரு நாய் ஒன்றையும் தன்னுடன் கூட்டத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து கூட்டத்தை வியக்கவைத்தார்.

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நேற்று தலைவர் சாதிர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கவுன்சிலர்கள் பலரும் பல்வேறு பணிகள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வேளையில் சுயேச்சை கவுன்சிலரான இந்தப் பிரமுகர் ராசப்பா நகர் பகுதியில் தெருநாய் தொல்லை அதிகம் இருப்பதாகக் கூறி, அதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி இவ்வாறு தெரு நாய் ஒன்றை நகர்மன்ற கூட்டத்திற்கு அழைத்து வந்தார்.

இதனால் ஆத்திமடைந்த மற்ற கவுன்சிலர்கள் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பேசும்  நேரத்தில் மன்றத்தை அவமதிக்கும் விதமாக அவர் செயல்பட்டதாகக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றியதை அடுத்து கவுன்சிலர் சங்கர், நாயை வெளியேற்றச் சொல்லி, சுயேச்சை கவுன்சிலர் மீது தண்ணீர் போத்தலை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X