Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தஞ்சாவூர் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு(26) தேர் பவனி நடைபெற்றது. இதன்போது தேரின் மீது மின்சார கம்பி உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்தது பலர் தூக்கி வீசப்பட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் போராடி தீப்பற்றி எரிந்த தேரை அணைத்தனர். இதில் தேர் முற்றிலும் எரிந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனவும், 15 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 15 பேருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago