2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தேர்தலில் போட்டியிட விஜய் பச்சைக்கொடி

Freelancer   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரியில் இடம்பெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். 

தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் களம் இறங்கவுள்ளமை உறுதியாகியுள்ளதுடன், விஜய் பெயரையும் மன்ற கொடியையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

169 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 12 பேர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதுடன், 157 பேர் களத்தில் உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
தற்போது புதுச்சேரியில் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .