Freelancer / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26ஆம் திகதியும் 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5ஆம் திகதியும் முடிவடையவுள்ளது.
இதனால் இந்த இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடத்துவதற்கு, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திகதியை தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம். நவம்பர் 2ஆவது அல்லது 3ஆவது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026