A.K.M. Ramzy / 2021 ஜனவரி 27 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தேர்தல் வருவதை எதிர்பார்த்தே ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகும் கண்டுபிடிக்க முடியாத, கண்டுபிடிக்க விரும்பாத முதல்வர், துணை முதல்வருக்கு ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைப்பதற்கான தார்மீக உரிமை இல்லை.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 10ஆவது முறையாக அதிமுக அரசு காலநீடிப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகவில்லை. தேர்தல் வருகிறது என்றதும் மக்களிடம் நாடகம் ஆடுவதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுகிறோம் என்று இறங்கி இருக்கிறார்கள்.
ஜெயலலிதா மீது உள்ளார்ந்த அக்கறை, அன்பு, அவர் மீதானமரியாதை இருந்திருக்குமானால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து, அதில்உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டும். அதைச் செய்து விட்டு நினைவகம் கட்டியிருக்க வேண்டும் என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago