Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 16 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலதிபருக்கு எதிராக நடிகை அமலாபால் தொடுத்துள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை அமலாபால். இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த 'டாஸ்லின் தமிழச்சி' என்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தார். இதற்காக சென்னை தி.நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் 'மான்ஜான்ஸ்' டான்ஸ் பயிற்சி அகடாமியில் பயிற்சியும் எடுத்தார்.
அப்போது, அழகேசன் என்பவர் அமலாபாலிடம், மலேசியா செல்லும்போது இப்ராகிம் என்பவருடன் இரவு உணவு அருந்த வேண்டும் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், தி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன், இப்ராகிம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை 17 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், இந்த வழக்கில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால், குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்இ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்த்து.
5 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
53 minute ago
2 hours ago