2025 ஜூலை 30, புதன்கிழமை

தொழுகை நடத்த இந்து சகோதரிகள் நில தானம்

Editorial   / 2022 மே 05 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூர் அருகே பெயில்ஜுடி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தேலா ஆற்று பாலம் அருகே மசூதியை ஒட்டி, தொழுகை நடத்தும் மைதானம் (ஈத்கா) 4 ஏக்கரில் உள்ளது. இங்கு ரம்ஜான் உட்பட ஈத் பண்டிகை காலத்தில் சுமார் 20,000 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவர்.

இந்த இடத்துக்கு அருகே, லாலா பிரிஜ்னந்தன் பிரசாத் ரஸ்தோகி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.

இவர் அனைத்து மதங்களையும் மதிக்கக்கூடியவர். இவர் தனது நிலத்தின் ஒரு பகுதியை ஈத்காவுக்கு தானம் அளித்து, இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையேயான உறவை வலுப்படுத்த விரும்பினார். ஆனால் தனது ஆசை நிறைவேறுவதற்கு முன்பாகவே, கடந்த 2003ம் ஆண்டில் லாலா பிரிஜ்னந்தன் பிரசாத் இறந்துவிட்டார்.

தங்களின் 20,424 சதுர அடி நிலத்தை, அவரது  சகோதரிகள் தானம் செய்துள்ளனர். இவ்விருவரும் இந்து சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .