2025 ஜூலை 24, வியாழக்கிழமை

நடிகர் பிரபு வைத்தியசாலையில் திடீர் அனுமதி; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் பிரபுவுக்கு நேற்றைய தினம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவரது  சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்துள்ளமை  கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லேசர் அறுவை சிகிச்சை மூலம் அவரது  சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.

தற்போது பிரபு பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .