Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 18 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.
பின்னர், அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சனிக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டார்.
பின்னர், எழும்பூர் 5ஆவது நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை வரும் 29ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago