2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’நம்பவைத்து நாசம் செய்த இயக்குனர்’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 07 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி நடிகையாக்குவதாகக் கூறி  மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திரைப்பட இயக்குனர்  கைது செய்யப்பட்டார்.

தனது மகளைச் சீரழித்த  இயக்குனரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை வடபழனி பொலிஸில் அவரது தாய் கண்ணீர் மல்க அளித்த புகாரின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த புகாரில்,  கொரோனா ஊரடங்கு காரணமாக ஒன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகிறார். என் மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் மதுரவாயல் ஸ்ரீகிருஷ்ணாநகர் 27வது தெருவை சேர்ந்த சத்யபிரகாஷ்(37) என்பவர் பழகியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பழகிய சத்யபிரகாஷ் எனது மகளை சினிமாவில் அறிமுகம் செய்து பெரிய நடிகையாக ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி நட்பாக பழகியுள்ளார். அந்தப் பழக்கத்தில் எனது மகளின் புகைப்படங்களை அவர் கேட்டு வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சத்யபிரகாஷ் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று நடிகையாக்குவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதில், சத்தியபிரகாசுக்கு திருமணம் ஆகி 7 வயதில் குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. தற்போது சமுதாயம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறாராம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X