2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து ஆலோசனை

Freelancer   / 2022 மே 22 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் மே.18ஆம் திகதி விடுதலைச் செய்யப்பட்டார். அவரது விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்இ சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே  21 ஆம் திகதியன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திஇ தற்கொலைக் குண்டுதாரியால்இ படுகொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம்  தொடர்பாக பேரறிவாளன்இ நளினிஇ முருகன்இ சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன்இ ஜெயக்குமார்இ ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 இந்நிலையில்,   தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில்இ மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 

உச்ச நீதிமன்றம்  அளித்துள்ள தீர்ப்பின் தொடர்ச்சியாக, முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 6 பேருக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு  மற்றவர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். உதகையில் இருந்து காணொளி வாயிலாக சட்ட வல்லுனர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.   
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X