Freelancer / 2025 மார்ச் 20 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
குரான் புத்தகம் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, அவுரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது
மராட்டியத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்றக்கோரி கடந்த திங்கட்கிழமை இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் நாக்பூரில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அன்று இரவு நாக்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 பொலிஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக பொலிஸார் இதுவரை 54 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
மேலும், அவுரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
40 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago