2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

’நான் இறக்கவில்லை; சமாதி நிலையில் இருக்கிறேன்’

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத், கர்நாடகா பொலிஸாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி,  'கைலாசா' என்ற நாட்டை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். 

மேலும், சமூக வலைதளங்களில் தினந்தோறும்  வீடியோக்களை வெளியிட்டு,  பக்தர்கள் மத்தியில் 'சத்சங்க' உரையாற்றி வந்தார்.

இந்நிலையில்,  சில நாள்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா,  'நான் இறக்கவில்லை; சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டொக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல்கள் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து, நித்யானந்தா நேற்று (02) தனது வலைதள பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில், 'சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம். அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .