2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

‘நிதியாண்டின் 2ஆவது பாதியில் பணவீக்கம் குறையலாம்’

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 15 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் படிப்படியாக விலை நிலைமையானது மேம்படும் என இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் ஷக்திகாந்தா தாஸ் தெரிவித்துள்ளதுடன், பலமான மற்றும் நிலையான வளர்ச்சியை அடையும் பொருட்டு பணவீக்கத்தை நிலைநிறுத்துவதற்கு தேவையான நாணய நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய வங்கி மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள நிதி நிறுவகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையின் அளவீடே பணவீக்கம் என தாஸ் மேலும் கூறியுள்ளார்.

நுண்நிதியியல் மற்றும் நிதியியல் உறுதித்தன்மையைப் பேணுவதற்கு விலை நிலைத்தன்மை முக்கியம் எனக் குறிப்பிட்ட தாஸ், நுண்நிதியியலைப் பாதுகாக்கும் மற்றும் முன்னேற்றும் நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X