A.K.M. Ramzy / 2021 மார்ச் 28 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லி
டெல்லி அரசின் அதிகாரங்களை மென்மேலும் குறைக்கும் வகையிலும், அதேசமயத்தில் மாநிலத்தின் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலும் பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்தை அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றம் செல்ல திட்டமிட்டு வருகிறார்.
இந்தச் சூழலில், அந்த சட்டத் திருத்தத்துக்குத் தமிழகத்தைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் அதிகாரங்களை சிதைப்பது ஜனநாயகப் படுகொலை என்றும், அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
டெல்லியை போலவே யூனியன் பிரதேச அந்தஸ்தில் உள்ள புதுச்சேரி மாநிலத்திலும் துணைநிலை ஆளுநர் தலையீடு குறித்து தொடர்ந்து புகார்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக புதுச்சேரி மாநிலத்தின் அதிகாரங்களும் குறிவைக்கப்படுமோ என்ற கவலையும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago