2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நிலவின் படங்கள்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  ஜூலை 14-ம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. பின்னர் கடந்த 18-ந்திகதி விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை நேற்று அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஓகஸ்ட் 23-ஆந்திகதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X