2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நிலவை நெருங்கும் சந்திரயான்-3

Freelancer   / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் மூன்று முறை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், நான்காம் கட்ட, இறுதி கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் திகதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.

 மேலும் ப்ராபல்ஷன் பகுதியில் இருந்து லேண்டர் பகுதியானது வியாழக்கிழமை (17) அன்று பிரிக்கப்படும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X