Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை கொளத்தூரில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 வயது சிறுவனான கீர்த்தி சபரீஸ்கர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், இவர் ஒரு சிறப்பு குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறுவனுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொளத்தூரில் உள்ள தனியார் நீச்சல் குள பயிற்சி மையத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று (04) வழக்கம் போல் சிறுவனின் பெற்றோர் அவரை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பயிற்சியாளர் சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வந்துள்ளார். இதற்கிடையே சிறுவனின் தந்தை காரில் அமர்ந்து கொண்டிருக்கையில், தாய் சிறுவனை அருகில் இருந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சிறுவன் நீரில் தத்தளித்துக் கொண்டு மூழ்கியபடி இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்து பயிற்சியாளரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், “அப்படி இருந்தால் தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்” எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
சிறிது நேரத்தில், சிறுவன் குளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்தபடி இருந்ததைக் கண்டு அதிர்ந்த தாய் அலறி அடித்தபடி கணவரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதனையடுத்து சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து சென்னை கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு பதிவு செய்த பொலிஸார் நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago