2026 மார்ச் 07, சனிக்கிழமை

பகட்டு அறிவிப்பால் சமூகநீதியை காக்க முடியாது

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

ஆட்சி முடியும்போது பகட்டு அறிவிப்புகளால் சமூகநீதியை காக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அனைத்து மனுக்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் நீச்சல் வீரர், கராத்தே வீரர்,கல்வியாளர் உள்ளிட்ட 15 சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் கௌரவித்தார். மேலும், கோரிக்கை மனுக்கள் அளித்தவர்களில் 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். பின்னர், நிகழ்ச்சியில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போதைய ஆட்சியில் நடைபெற்ற ஒரு ஊழலை விடமாட்டேன். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றுமுதல்வர் பேசியுள்ளார்.

அதிமுகவை வீழ்த்த நான் எந்த அவதாரத்தையும் எடுக்கத் தேவையில்லை. அதிமுகவை கரையானை போல முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வமும் அரித்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கெனவே அதிமுக பலவீனமாகி விட்டது. எனவே, அதை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் தேவையில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .