Ilango Bharathy / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பரஸ் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது.
இந்த வழிபாட்டு தலத்தில் மகாஆர்தி நிகழ்ச்சிக்காக நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் பக்தர்கள் பலர் குவிந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக மேற்கூரை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பக்தர்கள் அனைவரும் அக்கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக அங்கிருந்த மரம் முறிந்து பக்தர்கள் நின்றுகொண்டிருந்த மேற்கூரை மீது விழுந்தது. இதில், கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்த பக்தர்கள் சிக்கிக்கொண்டனர்.
இச்சம்பவத்தில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 minute ago
24 minute ago
24 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
24 minute ago
38 minute ago