2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகள் பாதிப்பு

Freelancer   / 2022 மே 23 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபரிமிதமான பஞ்சு விலை உயர்வால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 400க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

பருத்தி உற்பத்தி நடப்பாண்டில் மிகவும் குறைந்துள்ளதால் பஞ்சின் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

பருத்தி உற்பத்தியின் விளைச்சலை துல்லியமாக அளவிடுவதற்கு அரசிடமோ, தனியாரிடமோ சரியான புள்ளி விவரங்கள் இல்லை. பருத்தி உற்பத்திக்காலம் ஆரம்பமானதும்  மொத்த பஞ்சு வியாபாரிகளும் , பன்னாட்டு நிறுவனங்களும் அதிகளவில் பஞ்சை கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துக் கொண்டுள்ளன. 

வெளிநாடுகளுக்கும் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நூற்பாலைகளில் நாள்தோறும் உற்பத்தியாகும் 40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்படும்.

மேலும் 400 நூற்பாலைகளை நம்பியுள்ள சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திப்பார் என கூறப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .