2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

பதஞ்சலியின் 14 மருந்துகள் உரிமம் ரத்து

Mayu   / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமத்தை உத்தராகண்ட் மாநிலத்தின் மருத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்துள்ளது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரம் பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து, விளம்பரத்தின் வாசகங்களை மாற்ற சொல்லி உத்தரவிட்டிருந்தது.  

இந்த வழக்கு விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனத்தின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தததை அடுத்து, கடந்த 16-ம் திகதி நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார்.  இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், உங்கள் தயாரிப்பு பொருட்களின் விளம்பரத்தைப் போல மன்னிப்பு விளம்பரமும் பெரிய அளவில் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து முழு பக்க மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X