Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2025 மார்ச் 03 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தராகண்ட் மாநிலம் - சமோலியில், வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மனா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (28) திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 54 தொழிலாளர்கள் தங்கியிருந்த 8 கண்டெய்னர்களும் சிக்கிக்கொண்டன.
இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (1) மேலும் ஒருவரது சடலம் கைப்பற்றப்பட்டதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை பிரதமர் மோடி, சனிக்கிழமை (1), தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
அத்துடன், அதிக பனிப்பொழிவு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ள வீதியை சீரமைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை உடனடியாக அனுப்பி வைக்கவும் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
40 minute ago