2026 மார்ச் 07, சனிக்கிழமை

பனிப்பாறை உடைந்து பாரிய வெள்ளம்;14 சடலங்கள் மீட்பு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்திலுள்ள ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை.

பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்கிறது.

உடைந்த அணையை ஒட்டியுள்ள சுரங்கங்களில் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இந்தோ திபெத் எல்லை பொலிஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி இந்தோ திபெத் எல்லை பொலிஸ் படை செய்தி தொடர்பாளர் கூறுகையில்; ‘பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணி நடைபெறுகிறது. ஒரு சுரங்கத்தில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டனர்.

மற்றொரு சுரங்கத்தில் சுமார் 30 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் சுமார் 300 வீரர்கள் ஈடுபட்டுள்னர். சுமார் 170 பேரை காணவில்லை என உள்ளூர் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது’ என்றார்.

இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .