2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பப்ஜி காதலனுக்காக நுழைந்த பாக்.பெண்

Freelancer   / 2023 ஜூலை 10 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் 30 வயது பெண் சீமா ஹைதர். இவருக்கு குலம் ஹைதர் என்ற நபருடன் திருமணமான நிலையில், இந்த ஜோடிக்கு 4 குழந்தைகள் உள்ளன. பெண்ணின் கணவர் குலாம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு சீமாவும் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்ற இளைஞனும் பப்ஜி விளையாட்டு மூலம் அறிமுகமாகியுள்ளனர்.

இந்த விளையாட்டு மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், தான் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வந்து காதலன் சச்சினுடன் வாழ அதிரடி முடிவெடுத்தார் சீமா. அதன்படி, கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியா வந்த சீமா கிரேட்டர் நொய்டா பகுதியில் வசிக்கும் சச்சினுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். தன்னுடன் தனது 4 குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார் சீமா.

இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தது பொலிஸாரின் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து சீமா, சச்சின், சச்சினின் தந்தை நேத்ரபால் சிங் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், சீமா ஹைதரின் கணவர் குலாம் வீடியோ பதிவு மூலம் பிரதமர் மோடி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சவுதி அரேபியாவில் இருக்கும் அவர் தனது பதிவில் கூறியதாவது, எனது மனைவி மற்றும் குழந்தைகள் 4 பேரையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என மோடி அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X