Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 05 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில், விமானப்படை வீரரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு விமானப்படைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று, நேற்று முன்தினம் (04) சூரன்கோட் அருகே சென்று கொண்டிருந்த போது, மலைப்பகுதிகளில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று அவ்வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தப் பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த வீரர்கள் ஐந்து பேர், உயர் சிகிச்சைக்காக விமானம் மூலமாக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மற்ற மூவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளைத் தீவிரமாகத் தேடி வருவதோடு, அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago