Freelancer / 2022 ஜூன் 20 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 24 மணி நேரத்தில், 7 பயங்கரவாதிகளை என்கவுன்டரில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுப்பதும் தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கா்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஒருவர் துப்பாக்கி முனையில் பிடிபட்டதாகவும், அவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகவும் ஜம்மு - காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது;
காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் லஷ்கா் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் பகுதியில் உள்ளூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவரும், புல்வாமா பகுதியில் லஷ்கா் -இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்காம் பகுதியில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த லஷ்கா் - இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் கொல்லப்பட்டனர்.
43 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago