Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 11 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த நபரின் கடவுச்சீட்டில் சில பக்கங்கள் காணமால் போனதை அவர்கள் கண்டறிந்தனர்.
கடைசியாக பயணம் சென்று வந்த பக்கங்கள் என்பதை அறிந்த அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்நபர் வேண்டுமென்றே கடவுச்சீட்டி இருந்து பக்கங்களை கிழித்திருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
குற்றத்திற்குள்ளான அந்த நபருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. அதனால், கள்ளக்காதலியுடன் அவர் மாலைத்தீவு சென்று வந்துள்ளார். இந்த விஷயம் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே உஷாராக இருக்க கடவுச்சீட்டிலிருந்து பயணத் தகவல்கள் இருந்த பக்கங்களை கிழித்து நீக்கியுள்ளார்.
கடவுச்சீட்டில் பக்கங்களை கிழிப்பது குற்றம் என்ற நிலையில் அந்த நபரை பொலிஸார், மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகளில் கைது செய்துள்ளது. கைதான நபர் தனக்கு இந்தியாவின் வேறு இடத்திற்கு வேலை நிமித்தமாக செல்கிறேன் என மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு இவர் மாலைத்தீவு சென்ற நிலையில், செல்போன் மூலம் இவரை மனைவி தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.
1 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
28 Jul 2025