2025 ஜூலை 31, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவிகளின் குடுமிப்பிடிச் சண்டையால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 28 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் நேற்று முன்தினம் (26 ) பல்கலைக்கழக மாணவிகள் சிலர் வீதியில் சண்டையிடும்  வீடியொவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள பல்கலைக் கழகமொன்றைச் சேர்ந்த மாணவிகளே  இவ்வாறு  பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக குடுமிப்பிடிச்சண்டையில்  ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட  வாக்குவாதமே  இக் குடுமிப்பிடிச் சண்டைக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த மாணவிகளை எச்சரித்து  அனுப்பி வைத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அம்மாணவிகளின் சண்டையானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .